» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தச்சை அருகே பழைய பேப்பர் குடோனில் திடீர் தீவிபத்து

சனி 8, ஜூன் 2019 6:07:25 PM (IST)

நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் அருகே பழைய பேப்பர் குடோனில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தச்சநல்லூரை அடுத்த ராமையன்பட்டியில் விஜயராஜ் என்பவருக்கு சொந்தமான பழைய பேப்பர் குடோன் உள்ளது. பல இடங்களிலும் சேகரிக்கப்படும் பழைய காகிதங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் இங்கு கொண்டுவரப்பட்டு, எந்திரங்கள் மூலம் பண்டல்களாக கட்டப்பட்டு பல்வேறு ஆலைகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்த கிடங்கில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்ததும் பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சித்தனர்.  ஆனால் சேமிப்பு கிடங்கு முற்றிலும் தீக்கிரையானதில் சுமார் ரூ. 80 லட்சம் மதிப்பிலான எந்திரங்கள், பொருட்கள் சேதமடைந்துள்ளன. விபத்து குறித்து தச்சநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory