» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பல்லி விழுந்த குளிர்பானம் குடித்த விவகாரம்: தாய்- குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை

சனி 8, ஜூன் 2019 7:54:53 PM (IST)

நாங்குநேரி அருகே பல்லி விழுந்த குளிர் பானத்தை அருந்திய தாய், மகள்கள் மயங்கி விழுந்த சம்பவத்தில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள கூந்தன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து ( 33) விவசாயி. இவருக்கு முத்துலட்சுமி (29) என்ற மனைவியும், பெபினா (7), பிருந்தா (5) ஆகிய இரண்டு மகள்களும் உள்ளனர்.  முத்து லெட்சுமி வீட்டு அருகில் உள்ள கடைக்கு சென்று குளிர்பானம் வாங்கி குடித்ததில் அதில் பல்லி ஒன்று இறந்து கிடந்தது தெரிய வந்தது. 

பல்லி விழுந்த குளிர் பானத்தை அருந்திய தாய், மகள்கள் மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. முத்துலட்சுமி மற்றும் அவரது 2 குழந்தைகளுக்கு மருத்துவமனையில்யில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory