» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசியில் குடிநீர் பிரச்னை தீர்க்க நடவடிக்கை : எம்எல்ஏ தகவல்

ஞாயிறு 9, ஜூன் 2019 11:50:17 AM (IST)

தென்காசியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என எம்எல்ஏ செல்வமோகன்தாஸ் பாண்டியன் தகவல் தெரிவித்தார்.

சோலைசேரி கிராமத்தில் சுமார் 20 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட பழைய கட்டிடத்தில் ரேஷன் கடை இயங்கி வந்தது இதன் மேற்கூரை பெயர்ந்து சிதிலமடைந்த நிலையில் இதனை அகற்றி புதிய ரேஷன்கடை கட்டிடம் கட்டித்தர பொதுமக்கள் தென்காசி தொகுதி எம்எல்ஏ செல்வ மோகன் தாஸ் பாண்டியனிடம் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து புதிய கட்டிடம் கட்டுவதற்காக தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஏழு லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்து,அடிக்கல் நாட்டி இப்பணியை எம்எல்ஏ தொடங்கி வைத்தார். 

நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் என் எச் எம் பாண்டியன் தலைமை வகித்தார். முன்னாள் மேலகலங்கல் பஞ்சாயத்து தலைவர் சரவணவேல் முருகையா, கருவந்தா ஊராட்சிக் கழகச் செயலாளர் செல்வராஜ், சோலைசேரி கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தனர். அரசு ஒப்பந்தக்காரர் சுப்பையா வரவேற்றார். 

எம்எல்ஏ செல்வ மோகன்தாஸ்பாண்டியன் அடிக்கல் நாட்டி வைத்துப்பேசினார். தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட அவர், சோலைசேரி கிராமத்தில் குடிநீர் தேவையை தீர்க்கும் பொருட்டு ஊராட்சி பொது கிணற்றை ஆழப்படுத்தி புதிய மின் மோட்டார் அமைத்து தண்ணீர் வழங்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். 

நிகழ்ச்சியில் கிளைக் கழக தலைவர் சண்முகம், கிளைச்செயலாளர் பால்கனி, வீராணம் வெள்ளைதுரை பாண்டியன், பேரிடம் ஊத்துமலை செல்லத் துரை, முன்னாள் கீழப்பாவூர் ஒன்றிய துணைத்தலைவர் குணம்,  வீராணம் கிளைக் கழகச் செயலாளர் ஜின்னா உட்பட ஏராளமான கட்சி தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணை வெட்டியதாக தொழிலாளி கைது

புதன் 16, அக்டோபர் 2019 8:27:40 PM (IST)

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory