» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பெண்ணிடம் தங்கசெயின் பறித்து சென்றவர் கைது

ஞாயிறு 9, ஜூன் 2019 12:21:25 PM (IST)

தென்காசி அருகே பெண்ணிடம் தங்கசெயின் பறித்து சென்றவர் கைது செய்யப்பட்டார்.

ஜூன் 6ம் தேதியன்று காலை திருநெல்வேலி பாரதிநகரை சேர்ந்த தங்கமாரியம்மாள் 29 மற்றும் அவரது தாயார் உடன் ராஜபாளையத்தில் உள்ள அவரது சகோதரி வீட்டிற்கு செல்ல வேண்டி திருநெல்வேலி ரயிலில் வந்து தென்காசி ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி அங்கிருந்து புது பஸ்ஸ்டாண்ட் க்கு செல்லும் போது மெயின் ரோட்டில் வைத்து எதிரே பைக்கில்  வந்த நபர் தங்கமாரியம்மாள் கழுத்தில் கிடந்த சுமார் 3 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு சென்றார். 

அந்த பகுதியில் உள்ள  சிசிடிவி கேமராவில் கிடைத்த வீடியோ மூலமாக 2 மணிநேரத்தில் ஆலங்குளம் நெட்டூரை சேர்ந்த மகாராஜன் என்பவரை தென்காசி காவல்துறை கைது செய்தனர். மேலும் 3 பவுன் செயினையும் கைப்பற்றினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory