» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ரயிலில் பயணிக்க இணைப்பு பஸ் விட கோரிக்கை

திங்கள் 10, ஜூன் 2019 10:20:19 AM (IST)

செங்கோட்டை - மதுரை ரயிலுக்கு இணைப்பு பஸ் விட கோரிக்கை எழுந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி, சுரண்டை, சேர்ந்தமரம், வீகேபுதூர் உள்ளிட்ட பயணிகளின் நலனுக்காக செங்கோட்டையிலிருந்து மதுரைக்கு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்தரயிலில் சுரண்டை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பயணிகள் சென்று வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் தென்காசி, கடையநல்லூர், பாம்புகோவில் சந்தை, சங்கரன்கோவில் ஆகிய ரயில் நிலையத்திலிருந்து பயணிக்கின்றனர். தென்காசியிலிருந்து காலை 6-45 புறப்படும் இந்த ரயில் 7 மணிக்கு கடையநல்லூர், 7-10 பாம்புகோவில் சந்தை, 7-20 சங்கரன்கோவில் ரயில் நிலையத்திலிருந்து புறப்படுகிறது. ஆனால் இந்த ரயிலிலிருந்து பயணிக்க சுரண்டையிலிருந்து இணைப்பு பஸ் வசதி இல்லை. 

தென்காசிக்கு காலை 5-20 பஸ்ஸிற்க்கு பின்னர் 6-05 பஸ்ஸூம், கடையநல்லூருக்கு காலை நேர பஸ் இல்லாமலும், பாம்புகோவில் சந்தைக்கு காலை 5-20 தனியார் பஸ்ஸிற்க்கு அடுத்து 7-10 தான் அடுத்த பஸ்ஸூம், சங்கரன்கோவிலுக்கு காலை 4-30 மணிக்கு அடுத்து 6-20 தான் அடுத்த பஸ்ஸூம் உள்ளன. இவைகளில் சென்றால் ரயிலில் பயணிக்க முடிவதில்லை. 

இதனால் குடும்பமாக செல்லும் பயணிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். ஆகவே சுரண்டை பகுதி பயணிகள் நலன் கருதி செங்கோட்டை - மதுரை ரயிலில் பயணிக்க வசதியாக சுரண்டையிருந்து மேற்கண்ட பகுதிகளுக்கு இணைப்பு பஸ் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணை வெட்டியதாக தொழிலாளி கைது

புதன் 16, அக்டோபர் 2019 8:27:40 PM (IST)

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory