» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குற்றாலத்தில் சாரல் மழை சீசன் துவங்கும் அறிகுறி : சுற்றுலாபயணிகள் மகிழ்ச்சி

திங்கள் 10, ஜூன் 2019 11:09:19 AM (IST)குற்றாலத்தில் காலதாமதமாக சாரல் மழை பொழிந்து சீசன் துவங்குவதற்கான அறிகுறி ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழையகுற்றால அருவி ஆகிய அருவிகளில் பயணிகள் குளித்து மகிழ்வது வழக்கம். சிற்றருவி கடந்த ஆண்டு மூடப்பட்டது. குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் சீசன் துவங்கி ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கும்.  சீசன் காலத்தில் இந்தியா மட்டும் அல்லாமல் உலம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகள் குற்றாலம் வந்து செல்வர். ஆண்டு தோறும் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை குற்றாலம் சுண்டி இழுக்கும். கடந்த ஆண்டு சீசன் அருமையாக இருந்தது. மேலும் சீசன் காலமும் அதிகமாக இருந்ததால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்பட்டது.

இந்த ஆண்டு சீசன் குறிப்பிட்டபடி ஜூன் 1ம் தேதி துவங்கவில்லை. கேரளாவில் பருவ மழை துவங்கினால்தான் குற்றாலத்தில் தென்மேற்கு பருவமழையாக உள்ள சாரல் மழை பெய்து சீசன் துவங்கும். தற்போது இன்று (9ம் தேதி) மாலையில் பொதிகை மலையை சுற்றி மழை மேக கூட்டங்கள் உலா வந்து சாரல் மழையை பொழிந்தது. குற்றாலம், செங்கோட்டை, தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் லேசான சாரல் மழை இந்தது. இதனால் இப்பகுதிகளில் வெப்பம் தணிந்து சற்று குளிர்ச்சி தலை காட்டியது. போதிய அளவு மழை பெய்யாவிட்டாலும் முதல் நாளிலேயே குளு குளு நிலை நீடித்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஏற்கனவே குற்றாலம் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் வகையில் தயார் நிலையில் உள்ளது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டாலும் சாரல் மழை தீவிரமானால் அருவிகளில் தண்ணீர் வரத்து ஏற்படும். மேலும் சாரல் மழை அதிகரித்தால் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும். குற்றாலத்தில் சாரல் மழை பெய்து சீசன் துவங்கும் அறிகுறி ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மட்டும் அல்லாது குற்றாலம், தென்காசி, செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory