» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மருமகள் கண்டித்ததால் விரக்தி : மாமனார் தற்கொலை

திங்கள் 10, ஜூன் 2019 12:13:27 PM (IST)

பாளையங்கோட்டை அருகே குடிப்பழக்கத்தை கண்டித்ததால் விவசாயி வாழைப்பழத்தில் விஷ மருந்தை தின்று பரிதாபமாக உயிரிழந்தார்.

பாளையங்கோட்டையை அடுத்த சீவலப்பேரி போலீஸ் சரகம் மேல பாலாமடை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்  பூதப்பாண்டி (58). விவசாயி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாம். இந்நிலையில் நேற்று குடிபோதையில் வந்ததை அவரது மருமகள் கண்டித்துள்ளார். இதில் அவர்களுக்குள் வாய்த்தகறாறு ஏற்பட்டுள்ளது. 

இதனை அவரது மகன் கண்டிக்கவே மனவேதனை அடைந்த பூதப்பாண்டி வாழைப்பழத்தில் விஷம் அருந்தி மயங்கியுள்ளார்.  அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாளை அரசு மருத்துமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார் இதுகுறித்து சீவலப்பேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory