» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நோயால் அவதிப்பட்டு வந்த இளைஞர் தற்கொலை

திங்கள் 10, ஜூன் 2019 12:42:32 PM (IST)

நெல்லை அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். 

நெல்லை அருகே உள்ள மானூரை அடுத்த திருமலாபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் (30). கூலித்தொழிலாளி. இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் சரியாகவில்லையாம். இதனால் சம்பவத்தன்று அவர் விஷம் குடித்துவிட்டு திருமலாபுரம் அருகே உள்ள வயல்காட்டில் மயங்கி கிடந்தார். அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தென்காசி கோவிலில் நூல் வெளியீட்டு விழா

ஞாயிறு 8, டிசம்பர் 2019 11:45:30 AM (IST)

Sponsored Ads




Tirunelveli Business Directory