» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குற்றாலம் அருவிகளில் தண்ணீர்வரத்து அதிகரிப்பு : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

செவ்வாய் 11, ஜூன் 2019 5:40:04 PM (IST)குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் சற்று தாமதப்படுத்திய நிலையில் கடந்த 2 நாட்களாக குற்றாலம் பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்தது. இதனால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குற்றாலம் மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்த பலத்த மழையினால் குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீரின் வரத்து அதிகரித்தது. இதனால் இரவு 9.30 மணிக்கு குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி போலீஸார் குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை விதித்தனர். அதன் பின் மழையின் வேகம் சற்று குறைந்ததால் தண்ணீர் வரத்தும் சற்று குறைந்தது. இதனால் இரவு 10 மணிக்கு மீண்டும் குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து இரவு முழுவுதும் குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலில் ஈடுபட்டனர். 

குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிவரும் நிலையில் புலி அருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளுக்கு இதுவரை தண்ணீர் வரவில்லை. குற்றாலம் மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தால் இன்று அல்லது நாளை பழைய குற்றாலம் மற்றும் புலி அருவியிலும் தண்ணீர் விழத்துவங்கும் எனத்தெரிகிறது. 

அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டினால்தான் குற்றாலத்தில் சீசன் களைகட்டும் சுற்றுலா பயணிகளின் கூட்டமும் அதிகரிக்கும் அதற்குள் மாவட்ட நிர்வாகம், குற்றாலம் பேரூராட்சி, பொதுப்பணித்துறையினர் மற்றும் உள்ளாட்சி துறை நிர்வாகம் அனைத்து அருவிப்பகுதிகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் விரும்புகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory