» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சுற்றுச்சூழல் விழிப்புணர்வுகூட்டம்

செவ்வாய் 11, ஜூன் 2019 6:00:17 PM (IST)

தென்காசியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுகுறித்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடைபெற்றது.

தென்காசி நகராட்சி 1 வது வார்டு பள்ளியில் வைத்து நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்திற்கு மாவட்ட கல்வி அலுவலர் சீனிவாசன் தலைமை தாங்கினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தென்காசி வட்டார கல்வி அலுவலர் மாரியப்பன் வரவேற்று பேசினார்.

மேலகரம் முத்துநாயகம் அறக்கட்டளை சேர்மன் மற்றும் முன்னாள் மாவட்ட கல்வி அலுவலருமான பரமேஸ்வரன், சுற்றுச்சூழல் விஞ்ஞானி விஜயலட்சுமி, தென்காசி வட்டார நூலகர் பிரமநாயகம், சுற்றுச்சூழல் குறித்த சிறப்புரை ஆற்றினர்.

குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி மாவட்ட கல்வி அலுவலர் சீனிவாசன் தலைமையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. உலக சுற்றுச்சூழல் தினம் சார்பாக மாணவ, மாணவியர்க்கு கட்டுரைப் போட்டி, பேச்சு, மற்றும் ஓவியப்போட்டி நடத்திட கேட்டுக்கொள்ளப்பட்டது. 

தென்காசி வட்டார அளவில் 73 தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை நகராட்சி 1 வது வார்டு பள்ளி தலைமையாசிரியர் ஜெயசீலி, நூலகப்பணியாளர் முருகேசன் ஆகியோர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory