» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மணிமுத்தாறு அணை தூர்வாரும் பணிகள் பாதிப்பு

புதன் 12, ஜூன் 2019 10:48:37 AM (IST)

நெல்லை மணிமுத்தாறு அணையை பராமரிப்பதில் பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறையினர் இடையே போட்டி நிலவுவதால், சுமார் ஆயிரத்து 355 ஏக்கர் பாசன நிலத்திற்கு பயன்படும் பெருங்கால் மதகை பராமரிப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..

நெல்லை மாவட்டத்தின் பிரதான அணைகளில் ஒன்று மணிமுத்தாறு அணை. இந்த அணையில் 5,511 மில்லியன் கனஅடி கொள்ளளவு உடைய இந்த அணையில் 118 அடிவரை நீரைத் தேக்கலாம். இதன்மூலம் சுமார் 65 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து பகுதிகளும் தற்போது வனத்துறை கட்டுப்பாட்டில் வந்துள்ளது. இதனால் அணை பராமரிப்பு, கால்வாய்கள் தூர் வாருதல் ஆகியவற்றுக்கு வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டியிருப்பதால் பராமரிப்பு பணிகள் தாமதம் ஆவதாக கூறப்படுகிறது.

மணிமுத்தாறு அணை பகுதியில் விவசாயம் இல்லாத நேரத்தில் அப்பகுதியில் மீன் பிடிக்கப் பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது இங்கு மீன் பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது இதனால் விவசாய நிலங்களில் விவசாயம் செய்யப்படாத வேளைகளில் ஒரு சிறு வருவாய்க்காக நடத்தப்பட்டு வந்த மீன்பிடி தொழிலும் தற்போது நின்றுவிட்டதாக அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.இதனை தமிழக அரசு கருத்தில் கொண்டு அதிகார குழப்பத்தை சரிசெய்து விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory