» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையை பிளாஸ்டிக் இல்லாத நகராக்க ஒத்துழைப்பு தேவை : மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்

புதன் 12, ஜூன் 2019 12:37:00 PM (IST)

திருநெல்வேலியை பிளாஸ்டிக் இல்லா நகரமாக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் பெ.விஜயலட்சுமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தி பின் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களின் உற்பத்தி, சேமிப்பு, விநியோகம், விற்பனை, பயன்பாடு ஆகியவற்றுக்கு கடந்த 1-1-2019ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் ஆணையைச் செயல்படுத்தும் வகையில் திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிகளில் இதுவரை 7 ஆயிரத்து 911 சிறு மற்றும் குறு நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டு, 3 ஆயிரத்து 716 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர ரூ.7 லட்சத்து 12 ஆயிரத்து 200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் உபயோகத்தால் சுற்றுச்சூழல், பொதுசுகாதாரம் பாதிக்கப்படுவதோடு மக்களுக்கும், விலங்கினங்களுக்கும் பல்வேறு தீங்குகள் ஏற்படுகின்றன. பாதாள சாக்கடை, வாறுகால்களில் அடைப்புகள் உருவாகி சுகாதாரக்கேடு ஏற்படும். இதனால் அடுத்து வரும் தலைமுறைகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஆகவே, பிளாஸ்டிக் இல்லா நகரம்  என திருநெல்வேலி திகழ்ந்திட பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory