» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருமணமாகாத இளம்பெண்ணுக்கு பிறந்த குழந்தை சாவு

புதன் 12, ஜூன் 2019 1:23:50 PM (IST)

திருநெல்வேலி அருகே திருமணமாகாத பட்டதாரி நர்ஸ்க்கு பிறந்த ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. 

நெல்லை மாவட்டம் விகேபுரம் பகுதியை சேர்ந்த  நர்சிங் பட்டதாரி இளம்பெண் ஒருவர் அவரது உறவுக்கார வாலிபருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். பின்னர் இருவரும் உல்லாசமாக இருந்து வந்ததாக தெரிகிறது. இதில் அந்த இளம்பெண் கர்ப்பம் அடைந்தார். இதனிடையே அந்த வாலிபருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்ததை அடுத்து கடந்த இரண்டு மாதங்கள் முன்பு வெளிநாடு சென்றுவிட்டார். நிறைமாத கர்ப்பிணியான அந்த இளம்பெண் நேற்று முன்தினம் ஒரு தனியார் மருத்துவமனையில் அழகான ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். 

குழந்தை பிறந்த விவரத்தை வெளிநாட்டில் வேலை செய்து வரும் அவரது காதலனுக்கு தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் ஊருக்கு வர பல மாதங்கள் ஆகும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்தப் பெண்ணின் பெற்றோர் குழந்தையை காப்பகத்தில் விட்டுவிட முடிவு செய்து இளம்பெண்ணின் காதலரிடம் தெரிவித்துள்ளனர். அதற்கு அவரும் காப்பகத்தில் விட்டு விடுமாறு தெரிவித்தாராம். அந்த குழந்தையை அந்த பெண்ணின் பெற்றோர் காப்பகத்தில் ஒப்படைப்பதற்காக கொண்டு  நேற்று கொண்டு சென்றனர். 

அப்போது எதிர்பாராதவிதமாக அந்த குழந்தை பரிதாபமாக இறந்தது. இதையடுத்து காப்பக நிர்வாகிகள் குழந்தை இறந்தது குறித்து விகேபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory