» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வள்ளியூரில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு ?

புதன் 12, ஜூன் 2019 1:52:34 PM (IST)

தென்மேற்கு பருவமழை காரணமாக, வள்ளியூரை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்கும் என அனைவரும் எதிர்பார்க்கப்பில்உள்ளனர்.

நெல்லை மாவட்டம் வள்ளியூரை சுற்றியுள்ள ராதாபுரம், இருக்கன்துறை, உதயத்தூர், அஞ்சுகிராமம், பழவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 1,000க்கும் மேற்பட்ட காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. இங்கு ஓராண்டில் 9 மாதங்கள் தொடர்ந்து காற்று வீசுவதால், காற்றாலை மின் உற்பத்தி சீராக நடைபெற்று வருகிறது. 

தற்போது கேரளத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதால், வள்ளியூர் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மின் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மின்தடை ஏற்படுவது குறையும் என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory