» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது

புதன் 12, ஜூன் 2019 7:27:21 PM (IST)



சாரல் மழை குறைந்ததால் குற்றாலஅருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் சோகத்தில் உள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடும்வெயில் அடித்து வந்த நிலையில் கடந்த மூன்று, நான்கு நாட்களாக மலைப்பகுதியில் நல்ல மழை பெய்ததால் குற்றாலஅருவிகளில் தண்ணீர் வரத்து விழத்தொடங்கியது. மேலும் சீசன் தொடங்கிய அன்றே அரை மணி நேரம் குளிக்க தடை விதிக்கும் அளவுக்கு தண்ணீர் விழுந்தது. 

ஆனால் இன்று காலை சாரலின் அளவு குறைந்ததால் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது. ஐந்தருவியில் ஆண்கள் குளிக்கும் மூன்று பிரிவுகளில் 2 பிரிவுகளில் நன்றாகவும் பெண்கள் குளிக்கும் இரண்டு பிரிவுகளில் சுமாராகவும் தண்ணீர் விழுகிறது. புலியருவியில் தண்ணீர் விழவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory