» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அகஸ்தீஸ்வரத்தில் ஜமாபந்தி முகாம் நடைபெற்றது

புதன் 12, ஜூன் 2019 8:17:43 PM (IST)கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) சார் ஆட்சியர் (நாகர்கோவில்) விஷ்ணு சந்திரன் தலைமையில் இன்று (12.06.2019) நடைபெற்றது .

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம் மற்றும் விளவங்கோடு ஆகிய நான்கு வட்டங்களுக்கு 1428-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயத்துக்கு, விளவங்கோடு வட்டத்திலுள்ள 55  கிராம கணக்குகளை சரிபார்க்கும் வருவாய் தீர்வாய கணக்கு சரிபார்த்தல் நிகழ்ச்சியானது இந்த வருடம் ஜூன் மாதம் 12-ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 19-ம் தேதி வரை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. 

அகஸ்தீஸ்வரம் வட்டம், நாகர்கோவில் குறுவட்டத்தில் தேரேகால்புதூர் கிராமம், நாகர்கோவில் வடக்கு நகரம், நாகர்கோவில் தெற்கு நகரம், வேம்பனூர் மேற்கு கிராமம்,  வேம்பனூர் கிழக்குகிராமம், வடிவீஸ்வரம் கிழக்கு கிராமம், வடிவீஸ்வரம் வடக்கு நகரம், வடிவீஸ்வரம் தெற்கு நகரம், ஆகிய எட்டு வருவாய் கிராமங்களுக்கு சார் ஆட்சியர் (நாகர்கோவில்) தலைமையில் இன்று நடைபெற்ற வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து 111 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. மேலும், கிராமங்களுக்குரிய வருவாய் கணக்குகள் சார் ஆட்சியர் (நாகர்கோவில்)  தணிக்கை செய்யப்பட்டது. ஜமாபந்தியின் போது பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து 15 தினங்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மரு.கதிர்வேலு, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அனில்குமார், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் (ச.பா.தி) இராஜேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory