» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலி மாவட்டத்தில் வருவாய்த் தீர்வாயம்

வியாழன் 13, ஜூன் 2019 1:35:11 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் வருவாய்த் தீர்வாயம் வரும் 19ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 1428 ம்  பசலிக்கான வருவாய்த் தீர்வாயம் ஜூன் 19 -ம் தேதி முதல் 16 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது.  திருநெல்வேலி மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு நிகழ்ச்சி நிரலில் உள்ளவாறு மாவட்ட ஆட்சியர் திருவேங்கடம்  வட்டத்திலும், மாவட்ட வருவாய் அலுவலர் ஆலங்குளம் வட்டத்திலும் வருவாய்த் தீர்வாயம் நடத்த உள்ளனர்.  மீதமுள்ள அனைத்து வட்டங்களில் கீழ்க்கண்டவாறு வருவாய்த் தீர்வாய அலுவலர்களால் நடத்தப்பட உள்ளது.
மேற்கண்டவாறு 1428-ம் பசலிக்கான வருவாய்த் தீர்வாயம் ஒவ்வொரு வட்டத்திலும் தங்களது கிராமத்திற்காக நடைபெறும் நாட்களில் அந்தந்த வருவாய் கிராமத்தின் பொது மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையுமாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

ஓட்டுனர் மீது தாக்கு: அண்ணன், தம்பிக்கு வலை

வியாழன் 19, செப்டம்பர் 2019 1:22:56 PM (IST)

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory