» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அதிமுக பிரமுகர் காரை உடைத்து ரூ.8 லட்சம் காெள்ளை

வியாழன் 13, ஜூன் 2019 6:00:57 PM (IST)



நெல்லை மாவட்டம் ஆலங்குளம் போஸ்ட் ஆபீஸ் முன்பு காரின் கண்ணாடியை உடைத்து ரூ 8 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆலங்குளம் அருகே உள்ள மருதபுரத்தைச் சேர்ந்தவர் ராஜன். அதிமுக பிரமுகர். இவர் ஆலங்குளத்தில் உள்ள வங்கியில் பணம் எடுத்து தனது காரில் வைத்திருந்தாராம். பின்னர் காரை போஸ்ட் ஆபீஸ் முன் நிறுத்தி விட்டு திரும்பி வந்து பார்த்தபோது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்து பார்த்தபோது பணம் மாயமானது தெரியவந்தது. 

இதை அடுத்து பணம்  வைத்திருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் காரின் கண்ணாடியை உடைத்து அதில் இருந்த ரூ 8 லட்சம் பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory