» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசியில் சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

வியாழன் 13, ஜூன் 2019 6:17:24 PM (IST)

தென்காசியில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சாலைப்பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை 13 ஆண்டுகளுக்கு மேலாக நிறைவேற்றாத நிர்வாகத்தை கண்டிப்பதோடு, நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனர் நிர்வாகப்பொறுப்பில் ஐஏஎஸ் அலுவலரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசியில் சாலைப்பணியாளர்கள்  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி கோட்ட சாலைப்பணியாளர் சங்கத்தின் தலைவர் முகம்மது முஸ்தபா தலைமை தாங்கினார். தென்காசி கிளைத்தலைவர்; கசன்காத்தான், சங்கை ராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

சாலைப்பணியாளர் சங்கத்தின் மாநில செயலாளர் கோவிந்தன், தென்காசி கோட்ட செயலாளர் வேல்ராஜன், தென்காசி ஓய்வூதிய  சங்கத்தலைவர் மாரியப்பன், நெல்லை மாவட்ட அரசு ஊழியர் சங்க செயலாளர் துரைசிங், அகஸ்தியன், ஊரக வளர்ச்சித்துறை பிரதிநிதி, சுப்பரமணியன் ஆகியோர் சாலைப்பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க பொருளாளர் சேகர் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

ஓட்டுனர் மீது தாக்கு: அண்ணன், தம்பிக்கு வலை

வியாழன் 19, செப்டம்பர் 2019 1:22:56 PM (IST)

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory