» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குழந்தை இல்லாத ஏக்கத்தால் இளம்பெண் தற்கொலை

செவ்வாய் 18, ஜூன் 2019 10:42:43 AM (IST)

குழந்தை இல்லாத ஏக்கத்தால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் சுரண்டையை அடுத்த பங்களாச்சுரண்டையை சேர்ந்தவர் செல்வின் மனைவி சூரிய பிரகாசி (36 ). இவர்களுக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகிறது குழந்தைகள் இல்லை என தெரிகிறது. இதனால் அடிக்கடி விரக்தியில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை குடித்து விட்டார் தற்செயலாக வந்து பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு தென்காசி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory