» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலி அரசுப் பொருட்காட்சி தொடக்கப் பணிகள் : நெல்லை ஆட்சியர் பார்வை

செவ்வாய் 18, ஜூன் 2019 11:42:30 AM (IST)திருநெல்வேலி அரசுப் பொருட்காட்சி தொடக்கப் பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ்பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

திருநெல்வேலியில் 22ம் தேதியன்று மாநகராட்சி பொருட்காட்சி திடலில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மூலம் நடத்தப்படவுள்ள அரசுப் பொருட்காட்சிக்காக, அரங்குகள் அமைக்கும் பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ்,நேரில் சென்று, பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.அரசுப் பொருட்காட்சியில் காவல் துறை, சுற்றுலாத்துறை, செய்தி மக்கள் தொடர்புத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வனத்துறை, வேளாண்மைத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, கூட்டுறவுத் துறை, வருவாய் துறை, சமூக நலத்துறை, தோட்டக்கலைத் துறை, பொதுப்பணித் துறை, இந்து சமய அறநிலையத் துறை, பள்ளிக் கல்வித்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கைத்தறி மற்றும் கதர் கிராமத் தொழில் துறை, நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்து துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சுற்றுச்சூழல் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மீன்வளத்துறை உள்பட அரசுத் துறைகளும், பேரூராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ஆவின், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், திருநெல்வேலி மாநகராட்சி என அரசு சார்பு நிறுவனங்களின் அரங்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory