» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாளையில் பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்து : படுகாயமடைந்த பால் வியாபாரி சாவு

செவ்வாய் 18, ஜூன் 2019 1:10:51 PM (IST)

பாளையங்கோட்டை அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பால் வியாபாரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுக்கா குலசேகர நல்லூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலைய்யா மகன் நட்டார் (40).பால் வியாபாரி. இவர் தினமும் ஊரிலிருந்து பாளைக்கு பால் கொண்டு வருவது வழக்கம். சம்பவத்தன்று காலையில் நட்டார் பால் கேன்களை பைக்கில் ஏற்றிக்கொண்டு சீவலப்பேரி வழியாக பாளைக்கு வந்து கொண்டிருந்தார். சீவலப்பேரி பொட்டல் நகர் பகுதியில் எதிரே வந்த பைக்குடன் நட்டார் பைக் நேருக்கு நேர் மோதியது. 

இதில் தூக்கி வீசப்பட்ட நட்டார் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக  பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு நாட்டார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சீவலப்பேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து

NELLAIAPPANJun 19, 2019 - 07:34:18 PM | Posted IP 164.1*****

இது கொலையா , விபத்தா முறையான விசாரனை வேண்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory