» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சாலை விபத்தில் புதுமாப்பிள்ளை பரிதாப பலி

செவ்வாய் 18, ஜூன் 2019 1:56:11 PM (IST)

பாளையங்கோட்டை கேடிசி நகரில் நடைபெற்ற சாலை விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பாளையங்கோட்டை மகராஜநகர் வசந்தன் காலனியை சேர்ந்தவர் பார்த்திபன். ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. இவருடைய மகன் அருண் நயினார் (31). இவர் நெல்லையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் முடிந்து 8 மாதங்கள் ஆகிறது.புதுமாப்பிள்ளையான அருண் நயினார் பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் சம்பவத்தன்று இரவு தனது மோட்டார்பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த ஆட்டோ, பைக் மீது மோதியது. 

இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அருண் நயினார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory