» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கந்துவட்டி குறித்த புகாரளிக்க எண்கள் அறிவிப்பு

செவ்வாய் 18, ஜூன் 2019 5:40:06 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் கந்துவட்டி குறித்த புகாரளிக்க எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்தில் கந்துவட்டி வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை கோரி புகார்களை அளிக்க கடந்த 24.10.17 முதல் பிரத்யேகமாக ஓர் புகார் மையம் மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கந்துவட்டி பிரச்சனை தொடர்பாக பொதுமக்களிடமிருந்து செல்போன் எண் 9629711194 என்ற எண்ணில் பெறப்படும் புகார்களும், நேரில் பெறப்படும் புகார் மனுக்களும்  வட்டாட்சியர் அலுவலகத்திற்கும், காவல் துறைக்கும் உடனடியாக விசாரணைக்கு   அனுப்பப்படுகிறது. இவ்வாறு வரப்பெறும் புகார்கள் 1 வாரத்திற்குள் முடிவு  செய்யப்படுகிறது.  

மேலும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் ஆகியோர்களுடன் ஆய்வு செய்யப்பட்டு புகார்கள் முடிவு செய்யப்படுகிறது. . எனவே கந்து  வட்டி வசூல் செய்யப்பட்டு வருவதாகப் புகார்கள் வரப்பெற்றவுடன் உடனுக்குடன் இரு முனைகளிலும் விசாரணை செய்து அவைகள் உண்மை என்று  அறியப்பட்டவுடன் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

திருநெல்வேலி மாவட்டத்தில் வட்டித்தொழில் செய்வோர்  கண்டிப்பாக  வட்டிக்கு பணம் கொடுப்போர் சட்டத்தின் கீழ் பதிவு செய்து வட்டாட்சியரிடம் உரிய உரிமத்தினை பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு உரிமம் பெறாமல் வட்டித்தொழில் செய்வது தெரியவந்தால் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட பெண்கள் மேற்படி  தொலைபேசி எண்ணைத்தவிர மாவட்ட சமூக நல பாதுகாப்பு அலுவலகத்தில் பணியாற்றும் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் அலுவலரின் தொலைபேசி எண் (0462 -2576265)ல் தொடர்பு கொண்டு கந்துவட்டி தொடர்பான புகார்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துகொள்கிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory