» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நீரின்றி தவிக்கும் வீட்டுவசதி வாரிய குடியிருப்புவாசிகள்

செவ்வாய் 18, ஜூன் 2019 5:56:23 PM (IST)

நெல்லையில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் அரசு ஊழியர்களின் குடும்பத்தினர் கழிவறை பயன்பாட்டுக்குக்கூட தண்ணீர் இல்லாமல் அவதியுறுவதாக கூறியுள்ளனர்.

பாளையங்கோட்டை மகராஜநகர் பகுதியில் அமைந்துள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 300 அரசு ஊழியர்களின் குடும்பங்கள் உள்ளன. கடும் தண்ணீர் பற்றாக்குறையில் சிக்கியிருக்கும் இந்தக் குடியிருப்புக்கு இரு நாட்களுக்கு ஒருமுறை தாமிரபரணி ஆற்று நீர் குழாய் மூலம் வழங்கப்படுகிறதாம்.அந்தத் தண்ணீரும் குடும்பம் ஒன்றுக்கு 5 குடங்கள் வீதம் மட்டுமே கிடைப்பதாகக் கூறுகின்றனர். 

கூடுதல் தண்ணீரை வெளியில் இருந்து 100 ரூபாய் முதல் 300 கொடுத்து வாங்குவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.குடிக்க மட்டுமல்லாது, குளியல் மற்றும் கழிவறை பயன்பாட்டுக்குக் கூட தண்ணீரின்றி தவிப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

தென்காசி கோவிலில் நூல் வெளியீட்டு விழா

ஞாயிறு 8, டிசம்பர் 2019 11:45:30 AM (IST)

Sponsored Ads
Tirunelveli Business Directory