» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் நெல்லை ஓய்வூதியர்கள் மாநாடு வலியுறுத்தல்

செவ்வாய் 18, ஜூன் 2019 6:14:50 PM (IST)புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என நெல்லை ஓய்வூதியர்கள் வட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது.

நெல்லையில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் 3ஆவது வட்ட மாநாடு நடைபெற்றது.பாளை கே.ஆர் மண்டபத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு சங்க வட்ட தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். வட துணை தலைவர் ஈனமுத்து வரவேற்று பேசினார். மாவட்ட இணை செயலாளர் பாலசுப்பிரமணியன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். சங்க வட்ட செயலாளர் முருகையா செயலாளர் அறிக்கையை சமர்ப்பித்து பேசினார் ,பொருளாளர் அறிக்கையை கிருஷ்ணன் சமர்ப்பித்து பேசினார். தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட துணி தலைவர் ராஜேஸ்வரன் , தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பார்த்தசாரதி ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர் .வட்ட மாநாட்டில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்திட வேண்டும்.

நெல்லையில் நிலவும் குடிநீர் பிரச்சினைகளை போக்க வேண்டும்,டி.என்.ஜி.இ ஏ மாநில தலைவர் சுப்பிரமணியனின் தாழிகள் பணி நீக்கத்தினை ரத்து செய்திட வேண்டும், குலவணிகர்புரம் மேம்பால பணிகளை விரைந்து துவக்க வேண்டும்,கம்யூடேசன் காலத்தை 12 ஆண்டாக குறைத்திட வேண்டும்,குடும்ப ஓய்வூதியத்தை ரூ.50ஆயிரத்தில் இருந்து ரூ.1.50லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க மாநில செயலாளர் ஆறுமுகம் நிறைவுரையாற்றினார் ,

வட்ட தலைவர் ரகுபதி நன்றி கூறினார்.முன்னதாக காலையில் ரத்த தான முகாம் நடைபெற்றது .முகாமை பாளை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்னாள் முதல்வர் டாக்டர் ராமகுரு துவக்கி வைத்தார், மருத்துவ முகாமில் மருத்துவர்கள் பிரபுராஜ்,ஆர்த்தி,ஹரிப்பிரியா, பிசியோதெரபிஸ்ட் கோபால் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர் ,மருத்துவ முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணை வெட்டியதாக தொழிலாளி கைது

புதன் 16, அக்டோபர் 2019 8:27:40 PM (IST)

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory