» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அரசுஅதிகாரி போல் நடித்து பணம் மோசடி செய்தவர் கைது

செவ்வாய் 18, ஜூன் 2019 7:29:03 PM (IST)

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உதவி தொகை பெற்று தருவதாக வருவாய் ஆய்வாளர் போல் நடித்து பணம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

நாங்குநேரி அருகே உள்ள விஜயநாராயணம் சிவந்தியாபுரத்தை சேர்ந்தவர் வேலம்மாள். இவர் சில மாதங்களுக்கு முன்பு தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதையடுத்து அவரது உறவினரிடம் ஒரு மர்ம நபர் சென்று தான் வருவாய் ஆய்வாளர் என்றும் இறந்த வேலம்மாள் குடும்பத்தினருக்கு நிவாரண தொகை பெற்று தருவதாகவும் தெரிவித்தாராம். அது மட்டுமின்றி அவர்களிடம் முன்பணமாக ரூ. 12 ஆயிரம் வேண்டும் என்று கூறி தனது அக்கவுண்டில் போடுமாறு கூறியுள்ளார். 

அதனை நம்பி பணத்தை போட்டுள்ளனர். இதே போல் மூலக்கரைப்பட்டி லெத்திகுளத்தை சேர்ந்த சுப்பையா சமீபத்தில் இறந்தார். அவரது வீட்டிற்கு சென்ற அந்த மர்ம நபர் இதே போல் நிவாரண தொகை பெற்று தருவதாக கூறி தனது வங்கி கணக்கில் ரூ. 4 ஆயிரத்து 500 செலுத்துமாறு கூறியுள்ளார். அவர்களும் அந்த பணத்தை வங்கி கணக்கில் போட்டுள்ளனர்.

பின்னர் பல முறை அவர்கள் அந்த நபரை தொடர்பு கொண்ட போதும் பதில் இல்லை. பேருந்தில் பயணம் செய்த அவரை பொதுமக்கள் உதவியுடன் அவரை பிடித்து மூலக்கரைப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சேலத்தை சேர்ந்த தொழிலாளி பிரபாகரன் (50) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவர் வேறு எங்கெல்லாம் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory