» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கடும் வறட்சி உணவு குடிநீர் இன்றி கரடி உயிரிழப்பு : சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி

புதன் 19, ஜூன் 2019 11:20:49 AM (IST)
குற்றாலம் வனப்பகுதியில் வறட்சி நிலவுவதாலும் வன விலங்குகளுக்கு தேவையான குடிநீர் கிடைக்காமலும் வன விலங்குகள் தொடர்ந்து உயிர் இழந்து வருகின்றது.நேற்று  குற்றாலம் வனப்பகுதியில் செண்பகாதேவி அருவிக்கு அருகில் 16 வயது நிரம்பிய ஒரு கரடி உயிரிழந்த சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை பெய்து செழிப்பாக இருக்க வேண்டிய இந்த தருணத்தில்  சாரல் மழை பெய்யாததால் குற்றாலம் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் வனவிலங்குகளுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் கிடைக்காமல் தொடர்ந்து வனவிலங்குகள் உயிர் இழந்து வருகிறது குறிப்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு புளியங்குடி வனப்பகுதியில் தேவையான உணவு மற்றும் குடிநீர் கிடைக்காததால் ஒரு யானை உயிரிழந்தது.அதனைத் தொடர்ந்து நேற்று குற்றாலம் வனப்பகுதியில் செண்பகாதேவி அருவிக்கு அருகில் 16 வயது நிரம்பிய ஒரு கரடி உயிர் இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குற்றாலம் வனப்பகுதியில் யானை சிறுத்தை கரடி மான்.மிளா  உள்ளிட்ட பல்வேறு அரிய வகை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றது இவைகளுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் இதுவரை வனப்பகுதிகள் தொடர்ந்து கிடைத்து வந்தது.ஆனால் தற்போது பருவ மழை பொய்த்து விட்டதால் குற்றாலம் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது இந்நிலையில் நேற்று குற்றாலம் வனப்பகுதியில் செண்பகாதேவி அருவிக்கு அருகில் தேவையான உணவு கிடைக்காததால் பல நாட்கள் பட்டினி கிடந்த ஒரு கரடி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

தகவலறிந்த குற்றாலம் வனவர் பாண்டிராஜ் மற்றும் வன காவலர்கள் அடங்கிய குழுவினர்கள் விரைந்து சென்று சம்பவ இடத்தில் பலியான கரடியை பார்வையிட்டனர் அந்த கரடிக்கு  சுமார் 16 வயது இருக்கலாம் என்றும் பொதுவாக கரடிகள் 20 வயது வரை உயிர் வாழக் கூடியது என்றும் தற்போது இறந்த கரடிக்கு  16 வயது இருக்கலாம் என்றும் தெரிவித்தார் மேலும் இந்த கரடியை பிரேத பரிசோதனை செய்ய கால்நடை மருத்துவர் சிவக்குமார் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

அப்போது கால்நடை மருத்துவர் சிவக்குமார் இந்தக் கரடிக்கு 16 வயது இருக்கலாம் என்றும் வயது மூப்பின் காரணமாக கரடியின் பற்கள் அனைத்தும் விழுந்து விட்டது என்றும்  மேலும் கரடியின் இரப்பையில் உணவுகள் எதுவும் இல்லை இதனால் இந்தக் கரடி உணவு இல்லாமல் பல நாட்கள் பட்டினி கிடந்து அதனால் இறந்திருக்கலாம் என்றும் தெரிவித்தார் பிரேத பரிசோதனைக்கு பின் அந்த கரடியின் உடல்  சம்பவ இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது இந்த சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

தென்காசி கோவிலில் நூல் வெளியீட்டு விழா

ஞாயிறு 8, டிசம்பர் 2019 11:45:30 AM (IST)

Sponsored Ads
Tirunelveli Business Directory