» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி அருகே சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி

புதன் 19, ஜூன் 2019 12:16:18 PM (IST)

தென்காசி அருகே ஆய்க்குடியில் பழைய கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி மீது சுவர் விழுந்தது இதில் அவர் பலியானார்

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே உள்ள ஆய்க்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட கம்பளி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் மாசாணம் இவரது மகன் குற்றால சங்கரன்(40). நேற்று இவர் ஆயக்குடியில் உள்ள ஒரு சமுதாய கட்டிடத்தின் பழைய சுவரை இடிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது இடிந்த சுவர் குற்றால சங்கரன் மீது விழுந்ததால் படுகாயம் அடைந்தார். இதை அறிந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடோடி வந்து கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய குற்றால சங்கரனை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி குற்றால சங்கரன் பரிதாபமாக இறந்தார்.இதுபற்றி தகவலறிந்த ஆய்க்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதோடு குற்றால சங்கரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி ஆய்க்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தச் சம்பவம் கம்பளியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory