» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஒத்திவைப்பு : நெல்லைஆட்சியர் அறிவிப்பு

புதன் 19, ஜூன் 2019 5:34:43 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் ஜூன்-2019 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 21.06.2019 (மூன்றாவது வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற இருந்த விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நிர்வாக காரணத்தை முன்னிட்டு ஒத்திவைக்கப்படுகிறது. 

அன்று நடைபெற இருந்த கூட்டம் நான்காவது வெள்ளிக்கிழமை ஜூன் 28 ம் தேதி அன்று காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலத்தில் உள்ள மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் வைத்து நடைபெறும்.  இக்கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க உள்ளார்கள்.  

எனவே விவசாயிகள் குறை தீர்ப்பதற்காக நடைபெறும் இக்கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் 3 அணைகள் நிரம்பியது

செவ்வாய் 19, நவம்பர் 2019 1:00:18 PM (IST)

Sponsored Ads
Tirunelveli Business Directory