» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

செங்கோட்டையில் ஜமாபந்தி துவங்கி நடைபெற்றது

புதன் 19, ஜூன் 2019 5:51:28 PM (IST)செங்கோட்டையில் ஜமாபந்தி துவக்கநாளில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. 

செங்கோட்டை தாலூகா அலுவலகத்தில் வைத்து பசலி 1428 வருவாய் தீர்வாய ஜமாபந்தி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார் தலைமைதாங்கி பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமான மனுக்களை பெற்றுக் கொண்டார்.  ஜமாபந்தியின் முதல் நாளான இன்று இலத்தூர்  குறுவட்டத்திற்கான வருவாய் தீர்வாயத்தில் இலத்தூர், நெடுவயல், குன்னக்குடி, பிரானூர், வல்லம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமான மனுக்கள் பெறப்பட்டது. 

மேலும் நாளை (20ம் தேதி) பண்பொழி குறுவட்டத்திற்கான ஜமாபந்தியில் பண்பொழி, வடகரைகீழ்பிடாகை, வடகரைமேல்பிடாகை, கணக்கப்பிள்ளை வலசை, பெரியபிள்ளைவலசை, மேக்கரை, தேன்பொத்தை கிராமங்களுக்கும், (ஜூன் 21ஆம் தேதி) செங்கோட்டை டவுண், கீழூர், மேலூர், கற்குடி, புதூர், புளியறை, நாகல்காடு ஆகிய கிராமங்களுக்கான ஜமாபந்தியும் நடைபெற இருக்கிறது. இந்த மூன்று நாட்களில் நடக்கும் ஜமாபந்தியில் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் அனைத்தும் விசாரணை செய்யப்பட்டு தகுதி வாய்ந்த கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்படும். 

நிகழ்ச்சியில் செங்கோட்டை தாசில்தார் ஒசானாபெர்னாட்டோ, குடிமை பொருள் வழங்கல் தாசில்தார் ஹென்றிபீட்டர், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஜெயகங்கா, தலைமையிடத்து துணைத் தாசில்தார் ஞானசேகரன், மண்டல துணைத் தாசில்தார் அரவிந்த் வருவாய் ஆய்வாளர்கள் செந்தில்குமார், முருகேசன் கிராம நிர்வாக அலுவலர்கள் முருகேசன், கணேசன், குமார், முருகன், காளிசங்கரி மற்றும் புள்ளியியல் துறை, தோட்டக் கலைத்துறை, வேளாண்மைத்துறை, கிராம நிர்வாக உதவியாளர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக செங்கோட்டை வட்டாரத் துணை வேளாண்மை துறை அலுவலர் ஷேக்முகைதீன் புதியசெயல் விளக்க முறையில் அலுவலக முகப்பில் வேப்ப மரக்கன்று நட்டு வைக்கப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory