» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

இடம் வாங்கிய தகராறில் பெண்ணுக்கு வெட்டு தீவிர சிகிச்சை

புதன் 19, ஜூன் 2019 6:54:17 PM (IST)

சுரண்டையில் இடத்திற்கு வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்காத கோபத்தில் பெண்ணை சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் சுரண்டை சிவகுருநாதபுரம் திருமலையாண்டவர் கோவில் தெருவை சேர்ந்தவர் சமுத்திரம் என்பவரது மனைவி வசந்தா(60). பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீட்டை ரூ 8.50 லட்சத்திற்கு அதே பகுதியை சேர்ந்த அருளானந்தம் (எ) பிரகாஷ் (28) என்பவருக்கு விலை பேசி ரூ 3 லட்சம் அட்வான்ஸ் வாங்கியுள்ளனர். அருளானந்தத்திற்க்கு பெற்றோர் இறந்து விட்டனர். திருமணமாகவில்லை. 

அவர் அவருக்கு சொந்தமான 5 சென்ட் இடத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்ய அட்வான்ஸ் ரூ 3 லட்சம் வாங்கி இந்த வீட்டிற்கு கொடுத்துள்ளார் ஆனால் அந்த இடத்தை வாங்கியவர் இடம் வேண்டாம் என கூறி கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளாராம். அதனால் அருளானந்தம் வசந்தாவிடம் இந்த வீட்டை வேண்டாம் என கூறி கொடுத்த அட்வான்ஸ் ஐ திரும்ப கேட்டு வந்துள்ளார். 

இது தொடர்பான பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு சுமார் 8-30 மணியளவில் பணத்தை கேட்க சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு முற்றியுள்ளது. இதில் காேபத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வசந்தாவின் தலையில் வெட்டியுள்ளதாக தெரிகிறது இதில் நிலைகுலைந்த வசந்தா ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார். உடனடியாக சுரண்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது 

போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி தலைமையில் விரைந்து வந்த போலீசார் வசந்தாவை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்னர் அங்கிருந்து பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப் பட்டுள்ளார். இது குறித்து சுரண்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory