» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஐடிஐயில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் : நெல்லை ஆட்சியர் அறிவிப்பு

புதன் 19, ஜூன் 2019 7:11:45 PM (IST)

திருநெல்வேலியில் ஐடிஐயில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்டஆட்சியர் ஷில்பாபிரபாகர் அறிவித்துள்ளார்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் கல்வி பயிலவும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற் பயிற்சி மையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் மாவட்ட கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஐடிஐயில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக 03.05.2019 முதல் பதிவேற்றம் செய்ய வரவேற்கப்பட்டது. பின்னர்  15.06.2019 வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. தற்பொழுது 27.06.2019 வரை மறுபடியும் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.  எனவே விண்ணப்பம் செய்யவிரும்பும் மாணவர்கள் 27.06.2019 வரை விண்ணப்பம் செய்யலாம்.

தொழிற் பயிற்சி நிலையங்களில் ஆகஸ்ட் 2019 மாதம் முதல் தொடங்கும் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற் பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் உள்ள தொழிற் பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற் பிரிவுகள், இவற்றிற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு ஆகியவை இணையதளத்தில் உள்ள விளக்கக் கையேட்டில் தரப்பட்டுள்ளன.

மாணவர்கள் இணையதளத்தில் கொடுத்துள்ள அறிவுரைகளை கவனமாக படித்து புரிந்துக் கொண்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் எந்த மாவட்டத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ள விரும்புகிறார்கள் என்ற விவரம் குறிப்பிட வேண்டும். ஒரு மாணவர் விரும்பினால் பல மாவட்டங்களில் தொழிற் பயிற்சி நிலைய சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். மதிப்பெண் அடிப்படையில் மாவட்ட கலந்தாய்வுக்கான நிகழ்ச்சி நிரலும் இதே இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும். இணையதளத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த தொழிற் பயிற்சி நிலையங்களில் மாவட்ட கலந்தாய்வு நடைபெறும் என்ற விவரம் தரப்பட்டுள்ளது. 

அந்த நிகழ்ச்சி நிரலின் படி மாணவர்கள் சிங்கிள்விண்டோ முறையில் தாங்கள் சேர விரும்பும் தொழிற் பிரிவு மற்றும் தொழிற் பயிற்சி நிலையம் ஆகியவற்றை மாவட்ட கலந்தாய்வில் கலந்து கொண்டு தேர்வு செய்யலாம் என்ற விவரம் பேட்டை, அரசினர் தொழிற் பயிற்சி நிலைய துணைஇயக்குநர் அவர்கள் மூலம் தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டிய கடைசி நாள் 27.06.2019 என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் 3 அணைகள் நிரம்பியது

செவ்வாய் 19, நவம்பர் 2019 1:00:18 PM (IST)

Sponsored Ads
Tirunelveli Business Directory