» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஜமாபந்தியில் பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கல்

புதன் 19, ஜூன் 2019 7:48:16 PM (IST)திருநெல்வேலி மாவட்டம், திருவேங்கடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் 46 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ்,வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட வருவாய் தீர்வாய அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் திருவேங்கடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி (1428ம் பசலி ஆண்டு) வருவாய் தீர்வாய கணக்கு நிகழ்ச்சி இன்று (19.06.2019) நடைபெற்றது. பின்னர், மாவட்ட ஆட்சித் தலைவர்  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது-திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து வட்டாத்திலும் வருவாய் தீர்வாய கணக்கு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. திருவேங்கடம் வட்டத்தில் முதல் நாளான இன்று வருவாய் தீர்வாய கணக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. 

கரிசல்குளம் குறுவட்டத்திற்குட்பட்ட, மலையான்குளத்தில் 65 மனுக்களும், பெருங்கோட்டுரத்தில் 70 மனுக்களும், சத்திரம்கொண்டாத்தில் 72 மனுக்களும், அழகாபுரத்தில் 42 மனுக்களும், செவல்குளத்தில் 61 மனுக்களும், மதுராபுரியில் 18 மனுக்களும், அ.மதுராபுரியில் 51 மனுக்களும், உட்பட ஆக மொத்தம் 420 மனுக்கள் பெறப்பட்டு, சம்மந்தப்பட்ட துறைகளின் மூலம் நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இன்று பல்வேறு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000/- பெறுவதற்கான உத்தரவினை 10 நபர்களுக்கும் தனிப்பட்டா 26 நபர்களுக்கும், குடும்ப அட்டை 10 நபர்களுக்கும் ஆக மொத்தம் 46 நபர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்செந்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜோசப், வட்டாட்சியர் முருகேசன் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory