» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சங்கரன்கோவிலில் தொழிலாளிக்கு கொலை மிரட்டல் : இளைஞர் கைது

புதன் 19, ஜூன் 2019 8:05:38 PM (IST)

சங்கரன்கோவிலில் தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் புதுமனை தெருவை சேர்ந்தவர் வேல்ராஜ் ( 48). தொழிலாளி. இவரது மகள் சங்கரன்கோவிலில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். இவரை  மனோ (24) என்பவர் அடிக்கடி பின் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த வேல்ராஜ் தனது வீட்டை அந்த பகுதியில் இருந்து காலி செய்து பாடப்பிள்ளையார் கோவில் தெரு அருகே மாறினாராம்.சம்பவத்தன்று மீண்டும் அந்த பகுதிக்கு மனோ வந்துள்ளார். 

அதை வேல்ராஜ் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனோ வேல்ராஜை அவதூறாக பேசி கொலைமிரட்டல் விடுத்து விட்டு சென்றுவிட்டார். இது குறித்து வேல்ராஜ் சங்கரன்கோவில் டவுண் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோவை கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் 3 அணைகள் நிரம்பியது

செவ்வாய் 19, நவம்பர் 2019 1:00:18 PM (IST)

Sponsored Ads
Tirunelveli Business Directory