» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

இந்துக்களுக்கு எதிராக செயல்படும் அதிகாரிகள் : ஹெச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு

புதன் 10, ஜூலை 2019 1:11:43 PM (IST)

தமிழகத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் இந்து மக்களுக்கு எதிராக செயல்படுகின்றனர் என செங்கோட்டையில் நடைபெற்ற இந்து முன்னணி பொதுக்கூட்டத்தில் எச்.ராஜா பேசினார்.

செங்கோட்டையில் இந்து விரோத போக்கை கண்டித்து இந்து முன்னணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சாக்ரடீஸ் தலைமை தாங்கினார்.இந்து முன்னணி மாவட்டத் தலைவர் ஆறுமுகசாமி, விஎச்பி மாவட்டத் தலைவர் வன்னியராஜன், பா.ஜ.க., மாவட்டத் தலைவர் அன்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செங்கோட்டை நகர பா.ஜ.க., செயலாளர் வாசன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் பா.ஜ.க., தேசிய செயலாளர் எச்.ராஜா பேசியதாவது:துமிழகத்தில் தற்போதைய சூழ்நிலை பயங்கரமாக இருக்கிறது. தமிழகத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் இந்து மக்களுக்கு எதிராக செயல்படுகின்றனர். இப்படியே போனால் தமிழகம் விரைவில் காஷ்மீராக மாறிவிடும். நேல்லை மேற்கு மாவட்ட பகதிகளில் தொடர்ந்து இந்துக்கள் மீது போலீசார் பொய் வழக்குகள் பதிவு செய்து வருவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு பொய் வழக்கு போடும் காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 2014ம் ஆண்டு மோடி பிரதமராக வரவேண்டும் என தமிழகத்தில் 19 சதவீதம் மக்கள் வாக்களித்தனர். ஆனால் தற்போது 33 சதவீதம் மக்கள் வாக்களித்துள்ளனர். இது தமிகழத்தில் பா.ஜ.க., வளர்ந்து வருவதை காட்டுகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தது. ஜல்லிக்கட்டு நடத்த அனுமதித்தது பா.ஜ., ஆட்சியில் தான். கர்நாடக மாநிலத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கண்டிப்பாக கட்டப்படாது. இதற்கு மத்திய அரசு அனுமதிக்காது. இவ்வாறு எச்.ராஜா பேசினார்.கூட்டத்தில் பஜ்ரங்தள் மாநில அமைப்பாளர் சரவண கார்த்திக், இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் குற்றாலநாதன், வி.எச்.பி.மாநில தலைவர் பெரிகுழைக்காதர் மற்றும் பலர் பேசினர். கூட்டத்தில் செங்கோட்டை நகர தலைவர் மாரியப்பன், செயலாளர் வேம்புராஜ், வி.எச்.பி.,தலைவர் குருசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory