» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பள்ளியில் ஆசிரியர்கள் மாற்றப்பட்டதற்கு கண்டிப்பு : மாணவர்கள் போராட்டம்

புதன் 10, ஜூலை 2019 6:28:50 PM (IST)

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அரசு பள்ளியில் 2 ஆசிரியர்கள் மாற்றப்பட்டதை கண்டித்து மாணவ-மாணவிகள் இன்று காலை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ராதாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 1,500 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.இந்த பள்ளியில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு கணக்குபதிவியல் எடுத்து வந்த ஆசிரியர் ரவீந்திரன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் வளன் ஆகிய இருவரும் நேற்று திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் இதனால் அவர்கள் இன்று பணிக்கு வரவில்லை.

இதனையறிந்த நி.வெ.செ அரசு மேல்நிலைப்பள்ளியின் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் ரவீந்திரன் மற்றும் வளன் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், அவர்களை மீண்டும் பணியமர்த்த வலியுறுத்தியும் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ- மாணவிகளுடன் பள்ளியின் தலைமையாசிரியர் லாரன்ஸ், ராதாபுரம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.ஆனால் மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் இருவரையும் மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு வெகுநேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

மாணவ-மாணவிகள் போராட்டம் குறித்து தகவலறிந்த மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியரான ரவீந்திரன் பள்ளிக்கு வந்தார். அவர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளை சமரசம் செய்தார். ஆனால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory