» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாபநாசம் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்வு : மழை எதிரொலி

புதன் 10, ஜூலை 2019 6:46:44 PM (IST)

மேற்கு தொடர்ச்சி மலையில் சாரல் மழை பெய்து வருவதால் பாபநாசம் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று 44 அடியாக இருந்த நீர்மட்டம், 1 அடி உயர்ந்து இன்று காலை 45.10 அடியாக உள்ளது.

கேரள மாநிலத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால், நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக களக்காடு மலையில் உள்ள கொடுமுடியாறு அணைப்பகுதியில் 10 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 664.70 கனஅடி தண்ணீர் வருகிறது. 

அணையில் இருந்து குடிநீருக்காக 304.75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.இதனால் பாபநாசம் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. குற்றால மலைப்பகுதியிலும் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் மெயின் அருவியில் மிதமான தண்ணீரும், ஐந்தருவியில் குறைவான தண்ணீரும் விழுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணை வெட்டியதாக தொழிலாளி கைது

புதன் 16, அக்டோபர் 2019 8:27:40 PM (IST)

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory