» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கடையநல்லூர் அருகே காட்டுயானைகள் அட்டகாசம்

வியாழன் 11, ஜூலை 2019 11:31:32 AM (IST)

கடையநல்லூர் அருகே விவசாய நிலங்களில் காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன. இதனால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். 

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கருப்பாநதி அணைப்பகுதியில் சொக்கம்பட்டிக்கு மேற்கே வரற்றாறு பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு விவசாயிகள் வாழை, தென்னை உள்ளிட்ட பல்வேறு பயிர்களை பயிரிட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை விவசாய நிலங்களுக்குள் காட்டு யானைகள் தங்கள் குட்டிகளுடன் புகுந்து அங்கு பயிரிட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட வாழைகள், 100-க்கும் மேற்பட்ட தென்னைகளை சேதப்படுத்தின. மேலும் வெள்ளரி தோட்டம் கிணற்றில் உள்ள தண்ணீர் குழாய்களையும், மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் குழாய்களையும் யானைகள் உடைத்து சேதப்படுத்தின. 

ஏற்கனவே இந்த யானைகள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வடகரை, மேக்கரை, காசிதர்மம், சின்னக்காடு பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வந்தன. பின்னர் அங்கிருந்து இடம்பெயர்ந்து கடந்த 2 நாட்களாக இங்குள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களை நாசம் செய்து அட்டகாசம் செய்தன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணை வெட்டியதாக தொழிலாளி கைது

புதன் 16, அக்டோபர் 2019 8:27:40 PM (IST)

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory