» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அளவானகுடும்பம் அமைத்து வளம்பெற வேண்டும் : திருநெல்வேலி ஆட்சியர் அறிவுரை

வியாழன் 11, ஜூலை 2019 1:05:29 PM (IST)அளவான குடும்பம் அமைத்து வளம் பெற வேண்டும் என பாளையங் கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருநெல்வேலி ஆட்சியர் தெரிவித்தார். 

திருநெல்வேலி  மாவட்டம் பாளையங்கோட்டையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில்  உலக மக்கள் தொகை தின உறுதிமொழி மற்றும் பேரணியை மாவட்ட ஆட்சியர்  ஷில்பா பிரபாகர் சதிஷ் துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது. தமிழ்நாட்டில் குடும்ப நல திட்டம் கடந்த 63 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தாய்நேய் நலத்தை மேம்படுத்தி அதன் மூலம் பிறப்பு விகிதத்தையும் குழந்தை இறப்பு விகிதத்தையும் குறைப்பதுமே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.  

குடும்பநல திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்தியதன் விளைவு தமிழ்நாட்டில் (2016) பிறப்பு விகிதம் 6.4 ஆகவும் சிசு மரண விகிதம் 17.0 ஆகவும், உயர்வரிசை பிறப்பு விகிதம்  7.56 ஆகவும் உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது (2018) பிறப்பு விகிதம் 11.2 ஆகவும் இறப்பு விகிதம் 5.8 ஆகவும் சிசுமரண விகிதம் 17.0 ஆகவும் உயர் வரிசை பிறப்பு விகிதம் 7.7 ஆகவும் உள்ளது. ஒவ்வொருவரும் சிறுகுடும்ப நெறியை பின்பற்றி அளவான குடும்பம் அமைத்து வளம் பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் துணை இயக்குநர், மருத்துவம்; ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்பநலம், வசந்தகுமாரி, துணைஇயக்குநர், செந்தில்குமார் , மாநகர நல அலுவலர், சதீஷ்குமார் ,  மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணை வெட்டியதாக தொழிலாளி கைது

புதன் 16, அக்டோபர் 2019 8:27:40 PM (IST)

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory