» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலியில் டாஸ்மாக் கடைகள் மூடல் : மாவட்டஆட்சியர் உத்தரவு

வியாழன் 11, ஜூலை 2019 5:36:33 PM (IST)

நெல்லையில் அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதியம்மன் திருக்கோவிலில் ஆனித்தேரோட்டத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட மாவட்டஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி வட்டம், திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதியம்மன் திருக்கோவிலில் ஆனித்தேரோட்டம் 14.07.2019-அன்று நடைபெற விருப்பதால் திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் (டாஸ்மாக்) நடத்தப்படும் திருக்கோவிலைச் சுற்றியுள்ள பின்வரும் மதுபானக்கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மூடப்பட வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது.

1. 10728 68/4,மதுரைரோடு,திருநெல்வேலிசந்திப்பு.
2. 10730 52/2, ராஜா ரோடு,நயினார் காம்பிளக்ஸ்,திருநெல்வேலிசந்திப்பு.
3. 10731 வார்டு எண்.7,பெருமாள் மேற்குரதவீதி,திருநெல்வேலிசந்திப்பு.
4. 10733 102 ஏ,நயினார்குளம் ரோடு,தச்சநல்லூர்.
5. 10734 157 சி/4 மற்றும் 4ஃ5 மதுரைரோடு,தச்சநல்லூர்.
6. 10735 3 ஏ,சிவசக்திரோடு,தச்சநல்லூர்.
7. 10813 11,தச்சநல்லூர் ரோடு,கண்டியப்பேரிகிராமம்,திருநெல்வேலி.
8. 10912 218,குறுக்குத்துறைரோடு,திருநெல்வேலிடவுண்.

எனவே திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாகம் நடத்திவரும் மேற்கண்ட 8 மதுபானக்கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்தமதுபானக் கூடங்கள் ஆகியவைகள் 14.07.2019 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மூடப்பட்டிருக்கும். மேற்படி உரிமத்தலத்தில் மதுபானங்கள் விற்பனை கிடையாது என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் மேற்படி நாளில் திருக்கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் சட்ட விரோதமாக எவ்விடத்திலும் மதுபானங்கள் விற்பனை மற்றும் மதுபானங்கள் கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டால் காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணை வெட்டியதாக தொழிலாளி கைது

புதன் 16, அக்டோபர் 2019 8:27:40 PM (IST)

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory