» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ரயில்வே அமைச்சரிடம் தென்காசி எம்பி., முக்கிய மனு

வியாழன் 11, ஜூலை 2019 6:23:28 PM (IST)திருமங்கலம்-கொல்லம் இடையே அமைக்க இருக்கின்ற நான்கு வழிச்சாலை பணியை நிறுத்தி மாற்று வழியில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் ஜெய்ராம் கட்காரியிடம் தென்காசி எம்.பி., தனு~; எம்.குமார் கோரிக்கை மனு கொடுத்தார்.

மதுரை திருமங்கலத்திலிருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான நிலம் ஆர்ஜிதம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.   இச்சாலை சாகுபடி செய்துள்ள விவசாய நிலம் வழியே செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் விவசாய நிலங்களை அழித்து நான்கு வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் தென்காசி எம்.பி., தனுஷ் எம்.குமார் டெல்லியில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் ஜெய்ராம் கட்காரியை சந்தித்து நான்கு வழிச்சாலை குறித்து கோரிக்கை மனு கொடுத்தார். அம்மனுவில் எம்.பி., தனுஷ் எம்.குமார் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு திருமங்கலம் (மதுரை) முதல் கொல்லம் வரை ராஜபாளையம் வழியாக தேசிய நெடுஞ்சாலை (என்எச் 744)ல் நான்கு வழிச்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது. இத்திட்டப்பணி வளமான மற்றும் சாகுபடி செய்யக்கூடிய விவசாய நிலங்கள் வழியே செயல்படுத்த இருக்கிறது. இதனால் விவசாயத்தை மட்டுமே சார்ந்திருக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வழிச்சாலை அமைக்க அரசு திட்டமிடுவது நல்லது என்றாலும், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அங்கு பயிரிட முடியாத நிலத்தில் அரசு நான்கு வழிச்சாலை அமைத்தால் நல்லது.

எனவே, திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்க இருக்கும் நான்கு வழிச்சாலை திட்டத்தை மறு சீராய்வு செய்து மாற்று பாதையில் அதாவது விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் நான்கு வழிச்சாலை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தென்காசி எம்.பி., கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணை வெட்டியதாக தொழிலாளி கைது

புதன் 16, அக்டோபர் 2019 8:27:40 PM (IST)

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory