» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

விளைநிலங்களில் கரடி நடமாட்டம் : பொதுமக்கள் அச்சம்

வியாழன் 11, ஜூலை 2019 6:39:29 PM (IST)

களக்காடு அருகே இன்று விளைநிலங்களில் கரடி நடமாட்டத்தை பொதுமக்கள் நேரில் பார்த்ததால் அச்சமடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் மலையடிவாரத்தில் ஏராளமான விளைநிலங்கள் உள்ளன. இதில் விவசாயிகள் வாழை பயிர் செய்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலையில் விளை நிலங்களில் கரடி சுற்றி வந்தது. இதைப்பார்த்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். நீண்ட நேரம் கரடிகள் அந்த பகுதியில் உலா வந்தன. அதன் கால்தடங்கள் விளைநிலங்களில் பதிந்துள்ளது. அதன்பின் விவசாயிகளின் சத்தத்தால் கரடிகள் அங்கிருந்து வெளியேறின. இந்த கரடிகள் அங்குள்ள மலையில் உள்ள புதர்களில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

இரவில் உணவுக்காக ஊருக்குள் வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து களக்காடு வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவின் பேரில் வனசரகர் புகழேந்தி மேற்பார்வையில் வனத்துறை ஊழியர்கள் அங்கு சென்று சோதனையிட்டனர். கரடி நடமாட்டத்தால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணை வெட்டியதாக தொழிலாளி கைது

புதன் 16, அக்டோபர் 2019 8:27:40 PM (IST)

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory