» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

டிக்டாக் மோகத்தால் கணவரை உதறிய இளம்பெண் : கள்ளக்காதலுடன் குடும்பம் நடத்துவதாக புகார்

வியாழன் 11, ஜூலை 2019 7:17:53 PM (IST)

திருநெல்வேலியில் டிக்டாக் மோகத்தால் கணவரை உதறிய பெண் கள்ளக்காதலுடன் குடும்பம் நடத்துவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

பாளை.,கேடிசி நகரில் வசித்து வருபவர் திவ்யா (24). தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவரது கணவர் மகேஷ் (26). இவர்களுக்கு 6 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் இவருக்கு டிக்டாக் மூலம் ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டதாம். இதனால் திருச்சியில் இருந்த திவ்யா மறுபடி நெல்லைக்கு வந்துள்ளார். டிக்டாக் மோகத்தால் இவர் தனது குழந்தையையும் கொடுமைபடுத்தியதாக கூறப்படுகிறது. 

இது குறித்து தனது மனைவி  கள்ளகாதலனுடன் வசிப்பதாக மகேஷ் போலீசில் புகார் அளித்தார்.  மேலும் இது குறித்து திருநெல்வேலி குழந்தைகள் நல அமைப்பிலும் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் உறுப்பினர் குமார் திவ்யாவிடம் விசாரணை நடத்தியுள்ளார். திவ்யாவை கண்டித்த அவர் குழந்தையை, குழந்தைகள் நல அமைப்பின் முன் 10 நாட்களுக்கு ஒருமுறை ஆஜராக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory