» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மின்வாரிய ஊழியர் வீட்டில் தங்கநகை திருட்டு

வெள்ளி 12, ஜூலை 2019 10:50:28 AM (IST)

தாழையூத்தில் மின்வாரிய ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகையைத் திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி அருகே உள்ள தாழையூத்து ஜாய் காட்டேஜ் பகுதியைச் சேர்ந்த வெள்ளத்துரை மகன் சாந்தகுமார்(30). இவர், மகாராஜநகர் மின்வாரியத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 8 ஆம் தேதி குடும்பத்துடன் பாளையங்கோட்டை சாந்திநகரில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார். 

புதன்கிழமை இரவு வீட்டுக்குத் திரும்பியுள்ளனர். அங்கு வீட்டின் பூட்டு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு  5.5 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் தாழையூத்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory