» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஆக்ஸ்போர்டு பள்ளியில் உலக உயிரினங்கள் தினம்

வெள்ளி 12, ஜூலை 2019 5:43:57 PM (IST)



தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளியில் உலக உயிரினங்கள் தினம் கொண்டாடப்பட்டது.

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளியில் கொண்டாடப்பட்ட உலக உயிரினங்கள் தின விழாவிற்கு பள்ளி சீனியர் முதல்வர் திருமலை தலைமை தாங்கினார். செயலாளர் அன்பரசி திருமலை முன்னிலை வகித்தார். மாணவி அப்ரா வரவேற்று பேசினார்.விலங்குகளால் மனிதர்களுக்கு பரவக்கூடிய நோய்கள் பற்றி மாணவ, மாணவிகள் விளக்கினர். மேலும் மாணவ, மாணவிகள் பல்வேறு விலங்குகள் போன்று மாறு வேடம் அணிந்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் பட்டிமன்றம் நடத்தினர். 

பல்வேறு உயிரினங்கள் வாழ்க்கை சூழல் குறித்த கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை திரளான மாணவ, மாணவிகள் கண்டு ரசித்தனர். முடிவில் மாணவர் அச்சுதானந்தன் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் 3 அணைகள் நிரம்பியது

செவ்வாய் 19, நவம்பர் 2019 1:00:18 PM (IST)

Sponsored Ads




Tirunelveli Business Directory