» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாளையங்கோட்டை பகுதிகளில் பெய்த கனமழை : பொதுமக்கள் மகிழ்ச்சி

வெள்ளி 12, ஜூலை 2019 6:32:34 PM (IST)பாளையங்கோட்டை பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோடைகாலம் முடிந்தபின்னரும் திருநெல்வேலி மாவட்டத்தில் மழை பெய்வதற்கான அறிகுறி இன்றி கோடையை விஞ்சும் வகையில் வெயில் கொளுத்தியது. ஆங்காங்கே குடிநீர் தட்டுப்பாடும் நிலவியது. இதனால் எப்படி வெயிலையும் ,தண்ணீர் பிரச்சனையையும் சமாளிக்க போகிறோமோ என பொதுமக்கள் வருத்தத்தில் இருந்தனர். இந்நிலையில் இன்று மாலை பாளைங்கோட்டையில் சாந்திநகர், விஎம் சத்திரம்,திருநெல்வேலி ஜங்ஷன், ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.,


மக்கள் கருத்து

ஒருவன்Jul 14, 2019 - 03:51:29 PM | Posted IP 106.2*****

நன்று

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் 3 அணைகள் நிரம்பியது

செவ்வாய் 19, நவம்பர் 2019 1:00:18 PM (IST)

Sponsored Ads
Tirunelveli Business Directory