» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வயதான மூதாட்டிக்கு உதவிய தமிழக முதலமைச்சர் : நெல்லையில் நலத்திட்ட உதவி வழங்கல்

வெள்ளி 12, ஜூலை 2019 7:13:28 PM (IST)திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, வயதான மூதாட்டி  உள்ளிட்ட 4 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை இன்று (12.07.2019) வழங்கினார். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு தென்காசிக்கு  வந்த  முதலமைச்சரிடம்  பாளையங்கோட்டை சேர்ந்த  திருப்பதி  என்ற 70 வயதான மூதாட்டி  ஆதரவற்ற தனது இரண்டு பேத்திகளை பள்ளிக்கு அனுப்ப கூலி வேலை செய்து வருவதாகவும் பல ஆண்டுகளாக முதியோர் பென்ஷன் கேட்டு மனு கொடுத்தும் கிடைக்கவில்லை  என்றும் மனு அளித்தார்.  இந்த மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க முதலமைச்சர்  உத்தரவிட்டார். அந்த மனு மீது உடனடி நடவடிக்கை  எடுத்த திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர்  அவருக்கு மாதம் ரூ.1000 முதியோர் உதவித்தொகை வழங்குவதற்க்கான ஆணையை இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வழங்கி  மூதாட்டி திருப்பதியை அழைத்து அவருக்கு முதியோர் உதவித்தொகையை  வழங்கினார். 

இதுபோல் அரசின் நலத்திட்ட உதவிகள் வேண்டி மனு செய்த நெல்லை கொக்கிரகுளத்தை சேர்ந்த சுப்புலெட்சுமி என்ற பெண்ணுக்கு தையல் இயந்திரத்தையம், பாலா என்ற பெண்ணுக்கு முத்ரா சிறு வணிக கடனும் வெங்கடேஷ்வரனுக்கு என்ற மாற்றுத்திறனாளிக்கும் மூன்று சக்கர மதிவண்டியையும்; தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடிபழனிச்சாமி இன்று வழங்கினார்.

அப்போது செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ , ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி,  தமிழக அரசின் டெல்லி  சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் , திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், அவர்கள் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory