» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கரடி நடமாட்டம் : வனத்துறை தீவிர கண்காணிப்பு

வெள்ளி 12, ஜூலை 2019 7:52:55 PM (IST)

களக்காடு அருகே இன்று விளைநிலங்களில் கரடி நடமாட்டத்தை பொதுமக்கள் நேரில் பார்த்ததால் அச்சமடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் மலையடிவாரத்தில் ஏராளமான விளைநிலங்கள் உள்ளன. இதில் விவசாயிகள் வாழை பயிர் செய்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலையில் விளை நிலங்களில் கரடி சுற்றி வந்தது. இதைப்பார்த்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். நீண்ட நேரம் கரடிகள் அந்த பகுதியில் உலா வந்தன. 

அதன் கால்தடங்கள் விளைநிலங்களில் பதிந்துள்ளது. அதன்பின் விவசாயிகளின் சத்தத்தால் கரடிகள் அங்கிருந்து வெளியேறின. இந்த கரடிகள் அங்குள்ள மலையில் உள்ள புதர்களில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினரும் அங்கு சோதனையிட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் 3 அணைகள் நிரம்பியது

செவ்வாய் 19, நவம்பர் 2019 1:00:18 PM (IST)

Sponsored Ads
Tirunelveli Business Directory