» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

இபிஎஸ் ஆட்சியில் உள்ளாட்சித்தேர்தல் நடக்காது : திருநெல்வேலியில் முத்தரசன் பேட்டி

வெள்ளி 12, ஜூலை 2019 8:24:31 PM (IST)

முதல்வராக எடப்பாடிபழனிச்சாமி இருக்கும் வரை உள்ளாட்சிதேர்தல் நடக்காது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

இந்திய வாலிபர் சங்க நிர்வாகியான அசோக்குமார் நெல்லையில் கடந்த மாதம் வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது குடும்பத்துக்கு நிதி உதவி வழங்குவதற்கான நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரான முத்தரசன் செய்தியாளர்களிடம்கூறும் போது தமிழகத்தில் ஆணவப் படுகொலைகள் அதிகரித்து வருகின்றன. எல்லா ஆட்சியிலும் ஆணவப் படுகொலைகள் நடப்பது சாதாரணம்’என நியாயமற்ற முறையில் முதல்வர் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. ஆணவப் படுகொலைக்கு எதிராகச் சட்டம் இயற்றுவதோடு, மக்கள் மத்தியில் விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் .

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி இருக்கும்வரை உள்ளாட்சித் தேர்தல் நடக்காது. மத்திய, மாநில அரசுகள் மொழி பிரச்னைகளில் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. குடிமராமத்துப் பணிகளை மாநில அரசு சிறப்பாக செய்திருந்தால், தமிழகத்தில் இவ்வளவு பெரிய வறட்சி ஏற்பட்டிருக்காது. நல்ல திட்டங்களை எல்லாம் மக்கள் எதிர்ப்பதாக, சேலம் எட்டுவழிச்சாலை குறித்து முதல்வர் பேசுவது தவறானது. நல்ல திட்டங்களை மக்கள் என்றும் எதிர்க்க மாட்டார்கள். சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தால் அதிக கமிஷன் கிடைக்குமே தவிர மக்களுக்கு எந்த நலனும் ஏற்படாது. 

சேலம் எட்டுவழிச் சாலை, திருமங்கலம் - கொல்லம் நான்கு வழிச்சாலை உள்ளிட்ட திட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரான திட்டங்கள். இதுபோன்ற திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தபட்டால் வருங்காலத்தில் விவசாயமே இல்லாத நிலை உருவாகிவிடும்.எதிர்க்கட்சிகள் எதுவுமே இல்லாமல் பா.ஜ.க ஆட்சி நடக்கும் நாடாக மாற்ற அக்கட்சி விரும்புகிறது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாததாக பாரதிய ஜனதா உள்ளது. மோடி சர்வாதிகாரியாகச் செயல்பட்டு வருகிறார் என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து

ஒருவன்Jul 14, 2019 - 03:51:09 PM | Posted IP 106.2*****

ஹா!ஹா!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் 3 அணைகள் நிரம்பியது

செவ்வாய் 19, நவம்பர் 2019 1:00:18 PM (IST)

Sponsored Ads
Tirunelveli Business Directory